அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளின் முன்னேற்ற நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமி யோபதி இயக்குநர் மு.விஜயலெட்சுமி தலைமையில், மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்தும், இதேபோன்று ஊரக வளர்ச்சித் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கலைஞர் கனவு இல்லம் குடியிருப்பு கட்டட கட்டுமான பணிகளின் விவரம் குறித்தும், ஊராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவது குறித்து கேட்டறிந்ததுடன், பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்கிட உரிய முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார். தொடர்ந்து வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டபணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தவுடன் பணிகளை உரிய காலத்திற்குள் விரைவாக முடித்திடவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், தத்தனூர் ஊராட்சி தா.மேலூர் கிராமத்தில்வேளாண்மை கத்துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் தமிழ்நாடு பசுமை இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ.3.46 இலட்சம் மதிப்பீட்டில் பயிர் செய்யப்பட்டுள்ள பல்வேறு மரக்கன்றுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் ஜெ.தத்தனூர் கிராமத்தில் ரூ.22 இலட்சம் மதிப்பீட்டில புதிதாக கட்டப்பட்டு வரும் நூலக கட்டிடம் கட்டுமான பணியினை பார்வையிட்டு கட்டுமானப் பொருட்களின் தரம், நிதி ஒதுக்கீடு, தற்போது வரை முடிக்கப்பட்டுள்ள பணிகளின் விவரம் உள்ளிட்ட தகவல்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.

அதனை தொடர்ந்து தா.சோழன்குறிச்சி ஊராட்சியில் குழந்தைகள் நட்புப் பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் 2024-2025ன் கீழ் ரூ.32.60 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இரண்டு வகுப்பறைகள் கட்டிடம் கட்டுமான பணியினை பார்வையிட்டு கட்டுமானப் பொருட்களின் தரம், நிதி ஒதுக்கீடு, தற்போது வரை முடிக்கப்பட்டுள்ள பணிகளின் விவரம் உள்ளிட்ட தகவல்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் தா.சோழன்குறிச்சி ஊராட்சியில் ஊராக வளர்ச்சித்துறையின் மூலம் ரூ.16.45 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கான்வாடி கட்டிடம் கட்டுமான பணிகளை பார்iவியிட்டு ஆய்வு செய்து, பணிகளின் முன்னோற்றம் குறித்து கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து தா.சோழன்குறிச்சி ஊராட்சியில் ஊராக வளர்ச்சித்துறையின் மூலம் ரூ.31.40 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிடம் கட்டுமான பணிகளையும், தா.சோழன்குறிச்சி ஊராட்சி ஒன்றிய துவக்க மற்றும் உயர்நிலைப்பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவு தயார் செய்யப்படும் சமையல் கூடத்தினை பார்வையிட்டு பொருட்களின் இருப்பு, காலவதியாகும் நாள், மாணவர்களின் எண்ணிக்கை, உணவின் தரம் உள்ளிட்ட தகவல்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுக்கு தொடர்ந்து சுகாதாரமான முறையில் உணவு தயார் செய்து வழங்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.பின்னர் ஆண்டிடம் ஊராட்சியில் ஊராக வளர்ச்சித்துறையின் சார்பில் 15வது நிதிக் குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார கூடுதல் கட்டிடம் கட்டுமான பணியினை நேரில் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் வட்டார துணை சுகாதார நிலைய கட்டிடம் கட்டுமன பணிகளை பார்வையிட்டு கட்டுமானப் பொருட்களின் தரம், நிதி ஒதுக்கீடு, தற்போது வரை முடிக்கப்பட்டுள்ள பணிகளின் விவரம் உள்ளிட்ட தகவல்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர், ஆண்டிமடம் சித்தா மருத்துவ பிரிவினை பார்வையிட்டு பணிபுரியும் மருத்துவர்களின் எண்ணிக்கை, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் இருப்பில் உள்ள மருந்து மற்றும் மாத்திரைகள் உள்ளிட்ட தகவல்கள் குறித்து கேட்;டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.
அதனை தொடர்ந்து ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியம், கவரப்பாளையம் கிராமத்தில் ஊராக வளர்ச்சித்துறையின் கீழ் ரூ.16.45 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கான்வாடி கட்டிடம் கட்டுமான பணிகளை பார்iவியிட்டு உரிய காலத்திற்க்குள் பணியினை முடித்து பயன்பாட்டிற்க்கு கொண்டு வர சம்மபந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர் ஊராக வளர்ச்சித்துறையின் சார்பில் வாரதராஜன்பேட்டை போருராட்சியில் நடைபெற்று வரும் சாலை பணிகளை பார்வையிட்டார்.பின்னர், அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாமினை நேரில் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து, ஜெயங்கொண்டம் நகராட்சியில் ரூ.3.45 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வார சந்தை கட்டுமான பணியினை பார்வையிட்டு பணியினை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனை தொடர்ந்து ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியம், வாரியங்காவல் ஊராட்சியில் நடைபெற்று வரும் நெடுஞ்சாலைத்துறை, முதலைமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டம் 2024-2025ன் கீழ் ரூ.21 கோடி மதிப்பீட்டில் 2 வழி சாலையினை 4 வழி சாலையாக விரிவாக்கம் மற்றும் கீ.மீ 30ஃ0 – 33ஃ0 அரியலூர் – ஜெயங்கொண்டம் சாலை வலுப்படுத்தும் பணியினை பார்வையிட்டு; ஆய்வு செய்து பணிகளை உரிய காலத்திற்குள் தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர் திருமதி.மு.விஜயலெட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர்.ஆ.ரா.சிவராமன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் சு.தேன்ராஜ், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராஜ், உடையார் பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ரா.ஷீஜா, மாவட்ட நிலை அலுவலர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்