விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஜி செக்சன் பிரிவில் உள்ள அலுவலர் விவசாயிகள் சம்பந்தமான பிரச்சனையில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவு நகலை விவசாயிகள் கேட்கச் செல்லும் போது, விருதுநகர் மாவட்ட வருவாய் துறை அலுவலரின் நேர்முக உதவியாளர் ரத்தினவேலு என்பவர் விவசாயிகள் ஜிக்செக்ஷனில் இருந்த போது வலுக்கட்டாயமாக அங்கு வந்து உத்தரவுநர்கள் எல்லாம் தர முடியாது.

நீங்க எங்க வேணுமோ போங்க என்று தேவையில்லாமல் விவசாயிகளைப் பார்த்து பேசி உள்ளார் ரத்தினவேல் என்பவருக்கும் ஜி செக்ஷனில் நகல் கேட்கும் விவசாயிகளுக்கும் சம்பந்தமில்லாமல் விவசாயிகளை மிரட்டி கலெக்டர் உத்தரவு நகலை கொடுக்காமல் திசை திருப்பி உள்ளார். இதில் உள்நோக்கம் என்னவென்றால் சிவகாசி லவ்லி கார்ட்ஸ் நிறுவனத்தினர் இந்த ரத்தினவேலு மூலமாக தான் சில வேலைகளை செய்து வருவது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள உண்மையான நேர்மையான அரசு அலுவலர்கள் சில தகவல்களை கூறிய போது தான் இவர் எதற்காக விவசாயிகளை மிரட்டினார் என்ற உண்மை தெரிய வருகிறது.
ஆமத்தூர் வருவாய் கிராமத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் பற்றி பல தேதிகள் மாற்றப்பட்டு கலெக்டர் அலுவலக ஜி செக்சன் மூலம் வெவ்வேறு விதமாக விவசாயிகளுக்கு தகவல் அனுப்பப்பட்டு வருகிறது இதற்கு முதல் முழு காரணம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறை அலுவலரின் நேர்முக உதவியாளர் ரத்தினவேல் என்பவர் தான் இந்த ரத்தினவேல் மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் உள்ளன வெளியில் சொல்ல தயங்கிக் கொண்டும் சிலர் உள்ளார்கள்
தற்போது வந்துள்ள மாவட்ட ஆட்சியர் உயர்திரு சுகபுத்திரா அவர்கள் விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை இல்லாத இதுவரை யாரும் செய்யாத அளவில் தற்போது வேலைகளை நேர்மையான முறையில் செய்து வருகிறார் தற்போது விருதுநகர் மக்கள் அவரை பாராட்டி வருகிறார்கள் அவரின் நல்ல பெயரை விருதுநகர் மாவட்ட வருவாய் துறை அலுவலகம் கெடுத்து விடும் போல் தெரிகிறது. சிவகாசியை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்திற்காக தற்போது ஆதரவாக முழு வீச்சில் விருதுநகர் மாவட்ட வருவாய்த்துறை அலுவலகமும் வருவாய் துறை அலுவலரின் நேர்முக உதவியாளர் ரத்தினவேல் என்பவரும் மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்.
ரத்னவேலு என்பவரை உளவுத்துறை அதிகாரிகள் விசாரித்தால் பல உண்மைகள் வெளியே வரும் இவரின் திருவிளையாடல்களும் இதில் மாட்டிக் கொள்ளும் பொது மக்களின் சில குற்றச்சாட்டுகள் அடிப்படையில் பல்வேறு செய்திகள் உள்ளன. விருதுநகர் மாவட்ட ஆட்சியாளரும் விருதுநகர் மாவட்ட உளவுத்துறையும் இவர் மேல் விசாரணை நடத்த வேண்டுகிறோம்.