

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நவம்பர் 17ம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது.
அடுத்து, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நவம்பர் 25ம் தேதி கான்பூரிலும், இரண்டாவது போட்டி டிசம்பர் 3ம் தேதி மும்பையிலும் துவங்கவுள்ளது.
இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலிக்கு ஓய்வு அளிப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. முதல் டெஸ்ட்டில் ரஹானே கேப்டனாக செயல்படுவார்; 2வது டெஸ்ட்டில் கோலி கேப்டனாக இருப்பார் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.துணை கேப்டன் புஜாரா, ராகுல், மயங்க், கில், ஸ்ரேயஸ் ஐயர், சஹா, கே.எஸ்.பரத் ஆகியோர் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
