• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நியூயார்க் ரிசர்வ் வங்கி துணை
தலைவராக இந்திய பெண்

நியூயார்க் ரிசர்வ் வங்கி துணை தலைவராக இந்திய பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள 12 மத்திய ரிசர்வ் வங்கிகளில் முக்கியமானதாக கருதப்படும் நியூயார்க் மத்திய ரிசர்வ் வங்கியின் துணை தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த சுஷ்மிதா சுக்லா என்கிற பெண் நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை செயல்பாட்டு அதிகாரி பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 54 வயதான சுஷ்மிதா காப்பீட்டு துறையில் அனுபவம் மிக்கவர் ஆவார். சுஷ்மிதா நியமனத்தை நியூயார்க் மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர்கள் குழு அங்கீகரித்துள்ளதாகவும், அடுத்த ஆண்டு (2023) மார்ச் மாதம் அவர் பதவியேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுஷ்மிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், நியூயார்க் மத்திய ரிசர்வ் வங்கி போன்ற பணி சார்ந்த அமைப்பில் பணியாற்றும் வாய்ப்பை பெற்றதற்கு நான் பெருமைப்படுகிறேன். எனது அனுபவங்கள் மற்றும் பாடங்களைக் கொண்டு வங்கியின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கும், நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் தேவையான தலைமைப் பண்புடன் செயல்படுவேன்” என குறிப்பிட்டுள்ளார்.