தங்கம் விலையை கட்டுக்குள் கொண்டு வர பங்குச்சந்தையில் இருந்து விலக்களிக்க வேண்டும் என அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் மத்திய அரசுக்கு கோரிக்கை
இது குறித்து அவர்
மத்திய அரசுக்கு வைத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது.
அண்மை காலமாக உலகளவில் நடக்கும் அசாதாரணமான சூழலில் பொருளாதார நெருக்கடி என்பது நிலவி வருகிறது. எனவே பங்குச்சந்தை வணிகத்தில் ஈடுபட்டுள்ள பெரும்பாலான அந்நிய முதலீட்டாளர்கள் தங்கத்தை மிக மிக பாதுகாப்பான வர்த்தகமாக கருதி முதலீடுகளை கம்பெனிகளின் பங்குகளை வாங்குவதனை தவிர்த்து தங்கத்தை தேர்வு செய்து உலக பொருளாதார மந்தத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள பயத்தில் ஒட்டுமொத்த முதலீடுக்கான வழியாக தேர்வு செய்ததன் விளைவு தான் தங்கத்தின் தாறுமாறான விலையேற்றம்.

தற்போதைய நிலையில் இந்திய அரசு உடனடியாக பங்குச்சந்தை வர்த்தக பரிவர்த்தனையில் இருந்து தங்கத்தினை நீக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இந்திய ரிசர்வ் வங்கி பணம் வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் அளிக்கும் உத்தரவாதம் பணத்தின் மதிப்பிற்கான தங்கத்தின் இருப்பை வைத்து பகிர்ந்து கொள்வது என்ற கொள்கையின் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றது. தங்கத்தின் விலையை கட்டுக்குள் கொண்டு வர இந்திய அரசு முதலீடுகளுக்காக வெளிநாடுகளில் முதலீடு செலவுகளுக்காக வாங்கும் கடனை நம் மக்களிடம் உள்ள பணத்தை இந்திய அரசு வெளியிடும் பாதுகாப்பான வட்டி தரும் வகையில் முதலீடுகளை மடைமாற்றம் செய்யும் வகையில் திட்டங்களை போர்க்கால அடிப்படையில் திட்டங்களை கொண்டு வர வேண்டும். தங்கத்தில் அதிக முதலீடு என்பது பொருளாதாரத்தை சீர்குலைத்து விடும். எந்தவொரு பொருளாதார பாதுகாப்பு திட்டமும் ஒரு பொருளை மையப்படுத்தி நகர்வது பேராபத்தை விளைவிக்கும்.
ஒற்றை பொருளை மையப்படுத்தி நகரும் பொருளாதார கொள்கை தவறான முன்னுதாரணமாகிவிடும். பணம் என்பது பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சரி செய்து உற்பத்திக்கு உதவிடவும் ஏழை நடுத்தர மக்களிடம் புழங்குவதன் மூலமே பொருளாதார ஏற்றத்தை ஏற்படுத்த முடியும். முதலீடுகள் ஒரே பொருளை மையப்படுத்தினால் உணவு உற்பத்தி முதல் அடிப்படை வளர்ச்சி உற்பத்தி நாட்டின் உள்நாட்டு உற்பத்தி மொத்த நாட்டு உற்பத்தியை கேள்விக்குறியாக்கி விடும்.
எனவே இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்பதனை தாண்டி பொருளாதார ஆளுமை மிக்க நாடாக வளர்ந்து வரும் இச்சூழலை சரியாக பயன்படுத்தி தங்கத்தை ஒரே ஒரு முதலீடு கருவியாக பயன்படுத்த துடிக்கும் ஆதிக்க சக்திகளிடமிருந்து மடைமாற்றம் செய்து இந்தியர்களின் பணம் இந்தியாவின் வளர்ச்சி திட்டங்களுக்கான முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இந்தியர் பணம் இந்தியாவை வளர்க்க திட்டங்களை தீட்ட வேண்டும் என அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் மத்திய அரசுக்கு அறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.