விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த கோட்டைப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. கழிவுநீர் வருகால் செல்வதற்கு முறையாக வாறுகால் வசதி செய்து தரப்படாததால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே சாக்கடை கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துகிறது.

இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், நோய் தொற்றினால் அவதிப்படும் நிலை உள்ளது. மேலும் அருகில் நியாய விலை கடை, பிள்ளையார் கோவில், இருப்பதால் நியாய விலை கடைக்கு பொருட்கள் வாங்க செல்லும் பொதுமக்கள் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக வாறுகால் வசதி செய்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகில் சாக்கடை கழிவுநீர் தேங்காத வண்ணம் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.














; ?>)
; ?>)
; ?>)