தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026,மார்ச் 15-ந்தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் தேதி ஏப்ரல் 23 தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தது. அரசியல் சுவர் விளம்பம், கொடி கம்பங்கள், அரசு அலுவலகத்தில் உள்ள முதலமைச்சர் படங்கள் அகற்றப்பட்டனர்.

சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டது.
மேலும் தேர்தல் விதிமுறைகள் பின்பற்றுவதற்காக கண்காணிப்பு படை, பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு அலுவலர் நியமனம் செய்து தீவிர பணியில் தமிழகம் முழுவதும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திண்டுக்கல் – மதுரை நான்கு வழிச்சாலையில் மேம் பாலங்கள், தடுப்பு சுவர்கள் ஆகியவற்றில் அரசியல் கட்சி சுவர் விளம்பரங்கள் எழுதி வைத்துள்ளனர்.
தேர்தல் விதிமுறைப் படி அழிக்கப்படாத சுவர் விளம்பரங்களை தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே இருக்கிறது தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசியல் விளம்பரங்களை அழிக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



