விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம், தொம்பக்குளம் ரவி, நல்லக்காம்மாள்புரம் சுரேஷ் இருவரும் சாத்தூர், நடுவப்பட்டி அருகே கெங்கையம்மன் கோவிலுக்கு 31.10.25 அன்று திருமணத்திற்காக சென்றவர்கள்.

அதிகாலை இயற்கை உபாதைக்காக அருகிலுள்ள காட்டிற்கு சென்றபோது… அங்கு சட்டவிரோதமாக போடப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி உயிரிழந்து விட்டார்கள். உடல்களை அப்புறப்படுத்தி சுமார் முக்கால் கி. மீ தூரத்தில் உள்ள ஆற்றங்கரையில் புதைத்து இருக்கிறார்கள். தொம்பக்குளம் மக்கள் தினமும் 50கிமீ அலைந்து 5 நாட்களாக போராடினார்கள். காவல்துறை தீவிரமாக தொடர்ந்து தேடி விசாரணை செய்து 5 வது நாளில் கண்டுபிடித்து உடல்களை மீட்டனர். 04.11..25 அன்று கொட்டும் மழையில், இருவரின் உடல்களையும் வைத்து கீழ்க்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.
கோரிக்கை :
1) இருவர் சாவுக்கு காரணமான மின்வேலி அமைத்தவர் மீது இரட்டைக் கொலைவழக்கு பதிவு செய்ய வேண்டும். உடல்களை புதைத்த சுமார் 10 பேர் மீதும் கொலை வழக்கு போட வேண்டும்.
2) இறந்த இருவரும் விவசாயிகள், கூலிகள் அவர்களுக்கு முதலமைச்சர் நிவராண நிதி யில் இருந்து நிதி வழங்க வேண்டும்













; ?>)
; ?>)
; ?>)