சான்றோர் முன்னேற்றக் கழகம் சார்பில் தேனி மாவட்டத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சான்றோர் முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெகன் நாடார்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள வைகை அணையை கட்டிய காமராஜருக்கு அங்கு அவரது திருவுருவ சிலை மற்றும் மணிமண்டபம் கட்டப்பட வேண்டும் என்றும் தேனியில் உள்ள கம்பம் சாலைக்கு காமராஜரின் பெயரை வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்
மேலும் தேனி மாவட்டத்தில் நடைபெறும் கனிமவள கொள்ளையை தடுப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.