நெல்லை மாவட்டம் பகுதியான கூத்தங்குளியில் மீனவசமுகத்தை சேர்ந்த சபா என்பவரின் கணவர் கடந்த ஆண்டு. 02.09.2024 ல். கூத்தங்குளியில். ரகுமான் மற்றும் 16_பேர் சேர்ந்த கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலையில் கொல்லப்பட்ட நபர்களின் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து சிறை தண்டனை அனுபவித்து வரும் நிலையில்.
கூத்தங்குளியில் மீனவர் படுகொலையை அடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தார் கூத்தங்குளியில் வசித்தால் பிரச்சினை தொடரும் என கருதிய காவல்துறை. பாதிக்கப்பட்ட குடுப்பத்தை சேர்ந்தவர்களை வேறு ஊருக்கு இடம் பெயர காவல்துறை வற்புறுத்தியதால். மரணம் அடைந்த மீனவரது குடும்பம் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்கள் என 50_க்கும் அதிகமான நபர்கள் கன்னியாகுமரிக்கு இடம் பெயர்ந்து,
கன்னியாகுமரியில் வாடகை வீட்டில் வசித்து வரும் நிலையில்.
சபாவின் கணவர் மரணம் அடைந்த முதலாம் ஆண்டு நினைவு தினமான இன்று (செப்டம்பர்_2) கூத்தங்குளி தேவாலாயத்தில் இன்று மாலை இரங்கல் திருப்பலி நடக்க இருக்கும் நிலையில். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கூத்தங்குளிக்கு வர அனுமதிக்க கூடாது என தடுக்கும் நிலையில்.
கணவரின் முதலாம் ஆண்டு திருப்பலியில் பங்கேற்க எங்களை கூத்தங்குளி ஊருக்குள் அனுமதிக்க வேண்டும் தேவாலைய திருப்பலியில் பங்கேற்க வேண்டும்
என குமரி ஆட்சியர் அழகு மீனாவை நேரில் பார்த்து மரணம் அடைந்த மீனவரின் மனைவி சபா மனுகொடுத்த நிலையில்.

நெல்லை மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளரை பார்க்கவும் என குமரி ஆட்சியர் அனுப்பி வைத்த நிலையில். நெல்லை காவல்துறை கண்காணிப்பாளர் மரணம் அடைந்த வரின் மனைவி பிள்ளைகள் நெருங்கிய உறவினர்கள் 10_பேர்கள் தேவாலய திருப்பலியில் பங்கேற்க அனுமதித்த நிலையில்.
கூடன்குளம் காவல் நிலைய காவலர்கள். கன்னியாகுமரி காவல்துறை சம்பந்தப்பட்ட வீட்டினர் தங்கியிருக்கும் வீடுகளின் முன்பு இன்று காலைமுதலே சீர் உடை அணிந்த,அணியாத காவலர்கள் நிற்பதும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வீட்டின் சுற்று சுவரை விட்டு வெளியே வரமுடியாது தவிக்கும் நிலையில்.
இது குறித்து கன்னியாகுமரி காவல் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது. மரணம் அடைந்த மீனவரின் குடும்ப கூத்தங்குளி செல்ல நாங்கள் எவ்விதமான தடையும் செய்யவில்லை. ஆனால் பாதிக்கப்பட்ட குடும்பத்து உறவினர்கள் உட்பட 50_பேர் கூத்தங்குளி சென்றால் அங்கு மீண்டும் ஒரு கலவரம் உருவாகும் நிலை உள்ளதால். இவர்களின் பாதுகாப்புக்காகவே, மரணம் அடைந்த மீனவரின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே செல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளோம் என தெரிவித்தார்.













; ?>)
; ?>)
; ?>)