சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பிளாஸ்டிக் லைட்டரை தடை செய்யக்கோரி சாத்தூரில் தேசிய சிறு ரக தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத்தினர் வருவாய் துறை அமைச்சரிடம் மனு அளித்தனர்-
தமிழகத்தில் விருதுநகர் தூத்துக்குடி திருநெல்வேலி மற்றும் வேலூர் மாவட்டங்களில் பல ஆண்டுகளாக பல லட்சம் தொழிலாளர்கள் தீப்பெட்டி தொழில் செய்து வருகின்றனர் இந்த தொழில் 90% பெண் தொழிலாளர்களை அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பகுதிகளில் தயாரிக்கப்படும் தீப்பெட்டிகள் நமது தேசம் மட்டுமின்றி உலக நாடுகளில் 40 சதவீத தீப்பெட்டி தேவை பூர்த்தி செய்கிறது –
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சீனாவில் உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்கில் ஆன லைட்டர்கள் விற்பனை செய்யப்படுவது அதிகரித்து காணப்படுவதாகவும் மேலும் மியான்மர் வழியாக சட்டவிரோதமாக கண்டெய்னர் மூலமாக கொண்டு வரப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது – சீன லைட்டர்களின் வருகையால் பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் தீப்பெட்டி தொழில் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை தடுக்க வலியுறுத்தி தேசிய சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத்தினர் சாத்தூரில் வருவாய்த் துறை மற்றும் பேரிடர் மீட்புக் குழு அமைச்சருமான கே கே எஸ் ஆர் ராமச்சந்திரனிடம் மனு அளித்தனர்- மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் இதுகுறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் உற்பத்தியாளர்கள் முதலமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்து தரப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.