குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் சொந்த செலவில் பழுதடைந்த
சாலைகளை சீர் செய்ததுடன் உடன் இருந்து அதிகாரிகளுடன் பணி ஆய்வு.
கன மழையால் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையை பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு தனது சொந்த நிதியில் தற்காலிக தீர்வு ஏற்படுத்தப்பட்டது. உடனடியாக நிரந்தர தீர்வு ஏற்படுத்தபடும் எனவும் உறுதியளித்தார்.

நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை கடந்த நாட்களில் தொடர் கனமழை காரணமாக சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக மழை காலங்களில் குளம் போல காட்சியளிக்கிறது. இதனால் பல விபத்துகளும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வந்தன கடந்த ஆறு மாதங்களுக்கு முன் சாலை சீரமைக்க 14. 87 கோடி ஒதுக்கீடு செய்ததாக அறிவித்தார். ஆனால் பணிகள் துவங்காத காரணத்தால் சாலையில் ஏற்பட்டுள்ள குழிகள் குளம் போல காட்சியளித்து வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகவும் சிரமப்பட்டனர் இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் தேசிய நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள் மற்றும் சேர்மன் ஆகியோர் உடன் குழித்துறை பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள அடைக்கப்பட்ட கழிவு நீர் ஓடைகளை திறந்து விடபட்டதோடு சாலையில் தேங்கியிருந்த மண் ஜேசிபி இயந்திரத்தால் அகற்றப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் குமரி மாவட்டத்தில் ஒரே ஒரு தேசிய நெடுஞ்சாலை இருப்பதால் அதிகபடியான வாகனங்கள் செல்வதால் மற்ற தேசிய நெடுஞ்சாலைகள் ஐந்து வருடம் தாக்குப்பிடித்தால் நமது தேசிய நெடுஞ்சாலை ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் மட்டுமே தாக்குபிடிப்பதாகவும் இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தபடும் என்றும் நான்கு வழி சாலை நிறைவடைந்தால் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றும் அதிக மழை பெய்யும் மாவட்டம் என்பதால் இந்த மாவட்டத்தில் சாலை பணிக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யவதோடு இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை சாலை செப்பனிட கோரிக்கை வைத்துள்ளோம். அதிகாரிகள் தரமான முறையில் பணிகள் நடத்தப்பட வேண்டும் அதிகாரிகளின் சரியான மேற்பார்வை இல்லாததே தற்போதைய அவலத்திற்கு காரணம் என பேட்டியின்போது அவர் தெரிவித்தார்.