• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலில் 50க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றம்

ByA.Tamilselvan

Jun 18, 2022

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் அம்மன் சன்னதி வாயிலில் செயல்பட்டு வந்த 50க்கும் மேற்பட்ட கடைகளின் பொருட்களை அகற்றி கோவில் நிர்வாகம் நடவடிக்கை.
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 2018ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் வீர வசந்தராயர் மண்டபம் சேதமடைந்தது. கோவிலுக்குள் கடைகள் செயல்படக்கூடாது என நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தது.


அதனைத் தொடர்ந்து புது மண்டபம் பகுதியில் செயல்பட்டு வந்த கடைகள் மொத்தமாக குன்னத்தூர் சத்திரத்திற்கு மாற்றப்பட்டது.தற்பொழுது கிழக்குக் கோபுரம் அம்மன் சன்னதி பகுதியில் செயல்பட்டு வந்த 50க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டு இருந்தன. இந்நிலையில் கடையில் உள்ள பொருட்களை கோவில் நிர்வாகத்தினர் இன்று காலை முதல் அப்புறப்படுத்தி வருகின்றனர். இந்த பொருள்கள் கோயிலின் சிலைகளை மறைப்பதாகவும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் தகவல் தெரிவித்தனர்.