குமரி கிழக்கு மாவட்ட ஐஎன்டியுசி சார்பில் அதன் தலைவர் டாக்டர் சிவகுமார் தலைமையில் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. குமரி பாராளுமன்ற தொகுதி அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் குமரி எம்பி விஜய் வசந்த் முன்னிலை வகித்து துவக்கி வைத்தார். மாவட்ட மாநகர காங்கிரஸ் தலைவர் நவீன் ,அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் ஆரோக்கியராஜன் , ஐ என்டியுசி மாநில துணைத்தலைவர் அழகேசன், பகவதிகண்ணு , கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் டைசன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் முகைதீன் சாகுல் ஹமீது , கிழக்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் ராமமூர்த்தி, ராமன், இலச்சுமணன், உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் பொருட்கள் வயநாடு பகுதி மானந்தவாடி காங்கிரஸ் அலுவலகம் கொண்டு செல்லப்பட்டது