• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

நடிகர் அருண் விஜய் நாயகனாக நடிக்கும் “ரெட்டை தலை”

Byஜெ.துரை

Apr 26, 2024

“ரெட்டை தலை” திரைப் படத்தினை BTG Universal நிறுவனம் சார்பில் பாபி பாலச்சந்திரன், மிகப்பெரும் பொருட்செலவில், அருண் விஜய் திரை வாழ்க்கையில் இதுவரை இல்லாத வகையில் மிகப்பிரம்மாண்ட படைப்பாகத் தயாரிக்கிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில்
நடிகை சித்தி இத்னானி பேசியதாவது…

இந்தப்படத்தின் வைப் மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது. இந்தப்படத்தில் நானும் இருப்பது மிகமிகச் சந்தோஷமாக உள்ளது.

திருக்குமரன் சாருக்கு நன்றி. எனக்குத் தொடர்ந்து நல்ல இயக்குநர்கள் கிடைத்து வருகிறார்கள். கௌதம் மேனன் சாரில் ஆரம்பித்து அனைவரும் எனக்கு நல்ல கதாப்பாத்திரங்கள் தந்து வருகிறார்கள். அருண்விஜய் சாருடன் நடிப்பது மகிழ்ச்சி. இந்தப்படம் கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.

இயக்குநர் அஜய் ஞானமுத்து பேசியதாவது…

ஒரு வருடம் முன்பு பிடிஜி. சந்திப்பிற்காகப் போனேன் முதல் படமாக என் படம் செய்கிறார்கள் எனும் போது பயம் இருந்தது. ஆனால் அவர்கள் திரைப்படங்கள் மேல் வைத்திருக்கும் காதல் மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தந்தது. அவர்கள் இன்னும் நிறையப்படங்கள் செய்து பலருக்கு வாழ்க்கைத் தர வேண்டும் என்பதே என் ஆசை. திருக்குமரன் அண்ணாவிற்கு இந்தப்படம் கிடைத்தது பெரிய மகிழ்ச்சி. ஏ ஆர் முருகதாஸ் சாரிடம் வேலைப் பார்த்த போது அவர் எனக்குச் சீனியர். அவர்ப் பயங்கர ஸ்ட்ரிக்ட். மிகப்பெரிய திறமைசாலி அவருக்குச் சரியான ஹீரோவாக அருண் விஜய் கிடைத்துள்ளார். இந்த டைட்டில் மிரட்டலான டைட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சார் வைத்திருந்த டைட்டில். படம் மிகப்பெரிய வெற்றிபெறும் வாழ்த்துக்கள்.

நடிகர் விஜயகுமார் பேசியதாவது…

பாபி பாலச்சந்திரன் மிக எளிய குடும்பத்தில் பிறந்து இத்தனை உயரம் எட்டியுள்ளார். உழைப்பு, நம்பிக்கை, நேர்மை இருந்தால் வெற்றிப் பெறலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார். டாக்டர் மனோஜ் எங்கள் குடும்பத்தில் ஒருவர். ரெட்ட தல மிகச்சிறந்த டைட்டில். வெற்றிகரமான டைட்டில். திருக்குமரன் மிகப்பெரிய திறமைசாலி, கடுமையாக உழைத்து நல்ல திரைக்கதை உருவாக்கி, இந்தப்படம் செய்கிறார். இரண்டு குயின் இருக்கிறார்கள். படத்தில் உழைக்கும் கலைஞர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். படம் மாபெரும் வெற்றிப் பெற வாழ்த்துக்கள்.

இயக்குநர்க் கிரிஷ் திருக்குமரன் பேசியதாவது…

இந்த இடத்தில் நான் நிற்கக் காரணமான அனைவருக்கும் நன்றி. ஃபர்ஸ்ட் லுக் தனித்துவமாக இருக்க வேண்டும் எனச் சொன்ன போது, ஒரு கான்செப்ட் வைத்து உருவாக்கலாம் என இந்த ஐடியாவை அருண் விஜய் சாரிடம் சொன்னேன். இது என்ன மாதிரி ஐடியா எனக்கேட்டார். இரண்டு மிருகங்கள் ஒன்றை ஒன்று அடித்து சாப்பிட நினைக்கிறது அது தான் கரு என்றேன். எல்லோருக்கும் பிடித்திருந்தது. பாபி சார், மனோஜ் சார் எவ்வளவு செல்வானாலும் பராவாயில்லை, இதைத்தான் எடுக்கனும் என்றார்கள். அருண் விஜய் உடம்பை வில்லாக வளைத்து, இதற்காக உழைத்துள்ளார். இந்த டைட்டில் ஏ ஆர் முருகதாஸ் சாருடையது, அருண் விஜய் சாருக்கும் எனக்கும் இந்த டைட்டில் பிடித்திருந்தது. இந்தக்கதைக்கு இது தான் சரியாக இருக்குமெனத் தோன்றியது. ஏ ஆர் முருகதாஸ் சாரிடம் கேட்டேன், அவர் வைத்துக்கொள் என அன்போடு தந்தார். இந்தப்படம் ஒரு குழுவாக உருவாக்கும் படம் பாபி சார், மனோஜ் சார் மட்டுமல்லப் பிடிஜி என்பது எங்களையெல்லாம் இணைத்த ஒரு பெரிய குழு. தான்யா, சித்தி இத்னானி அழகாக நடிக்கிறார்கள். அருண் விஜய் சார் ஆச்சர்யம் தந்துகொண்டே இருக்கிறார். படத்திற்காகப் பயங்கரமாக உழைக்கிறார். தயாரிப்பாளர் என் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்ற கடுமையாக உழைப்பேன். இந்தப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் நன்றி.

நடிகர் அருண்விஜய் பேசியதாவது…

பாபி சார் மனோஜ் சார்ப் பற்றி எல்லோரும் பேசினார்கள். இந்தப்படம் எனக்கு மிக நெருக்கமான படம். இந்தக்கதை மிக மிகப் பிடித்த கதை. இதற்கு முன் மனோஜ் அண்ணா அனுப்பிய கதைகள் கேட்டிருக்கிறேன், நான் எப்போதும் ஆடியன்ஸ் மைண்ட்செட்டில் இருந்து தான் கதைக் கேட்பேன். திருக்குமரன் இந்தக்கதைச் சொல்லி, ரெட்ட தல என்று சொன்ன போது அட்டகாசமாக இருந்தது. அவர் ஆரம்பத்திலேயே படத்திற்காகக் கடுமையாக உழைத்து வருவது எனக்குப் பிடித்துள்ளது. அவருக்காக நானும் கடுமையாக உழைப்பேன். சித்தி, தான்யா, ஆண்டனி சார், கலைஞர்கள் அனைவருக்கும் என் நன்றிகள். இந்தப்படம் மீது இப்போதே நல்ல பாஸிடிவிட்டி இருக்கிறது. சாம் சி எஸ் உடன் ஏற்கனவே வேலைப் பார்த்துள்ளேன். இந்தப்படம் அவருக்கு வெற்றிப்படமாக இருக்கும். உங்களை மகிழ்விக்கக் கண்டிப்பாக கடுமையான உழைப்பைத் தருவோம். இந்தப்படம் கண்டிப்பாக உங்களை ஆச்சரியப்படுத்தும் நன்றி.

இப்படத்தில், சித்தி இத்னானி அவருக்கு ஜோடியாக நடிக்கிறார், இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ், யோக் ஜேபி, வின்செண்ட் அசோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.