ஈரோட்டில் காய்கறி வியாபாரிகளுக்கு வீட்டுமனை தருவதாகக் கூறி ரூ.2 கோடி மோசடி செய்த வழக்கில் அதிமுக நிர்வாகி வைரவேல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்!
ஈரோடு நேதாஜி காய்கறி சந்தை வியாபாரிகள் சங்க பொருளாளராக வைரவேல்! அப்பகுதியில், அதிமுக வார்டு செயலாளராகவும் உள்ளார். இவர் வீட்டுமனை வாங்கி தருவதாக கடந்த 2015ல் ரூ.2 கோடி பணம் வாங்கியதாக புகார் எழுந்த நிலையில், அதிமுக நிர்வாகிகள் உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பண மோசடியில் ஈடுபட்ட மேலும் 10 பேரை காவல்துறை தேடி வருகிறது. வாங்கப்பட்ட 20 ஏக்கர் நிலத்தை 5 நிர்வாகிகள் தங்களின் பெயரிலும், உறவினர்கள் பெயர்களிலும் பதிவு செய்ததாகவும், மேலும், சங்க உறுப்பினர்களுக்கு தெரியாமல் நிலத்தை ரூ.12 கோடிக்கு விற்றுவிட்டதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது!