• Thu. Nov 13th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

செப்டம்பர் 18 தேதியிட்ட இதழுக்கான வாசகர் கடிதங்கள்

ByAra

Sep 23, 2025

அரசியல் கட்சிக் கொடிக்கம்பங்கள் பட்டா இடத்தில்தான் இருக்க வேண்டும், பொது இடங்களில் இருக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குப் பின்னரும்…  பல அரசியல்வாதிகளும் அத்துமீறிக் கொண்டிருக்கும் நிலையில், கிளைக்கு ஒரு சென்ட் இடம் அதில் கொடிக்கம்பம் என்று  தீர்மானித்து செயல்படும் அதிமுக ஒன்றிய செயலாளர் மச்சராஜாவின் செயல்பாடு உள்ளபடியே அனைத்துக் கட்சிகளுக்கும் பாடம்.  ஒவ்வொரு ஊரிலும் கட்சிக்கு சொத்து இருப்பது பெரும் நன்மையைக் கொடுக்கும்.

-வேணி சேகரன்,

மயிலாடுத்துறை

ஜெயலலிதா அவர்களின் சமூக நீதித் திட்டங்கள் குறித்து முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர்கள் எழுதி வரும் தொடர் அதிமுகவினருக்கு ஒரு பாடப் புத்தகம். இந்தத் தேர்தலை எதிர்கொள்ளும் அதிமுக நிர்வாகிகள் அனைவரும் கே.டி.ஆரின் இந்த தொடரை படித்து அதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களை மக்களிடம் எடுத்துச் சென்றாலே போதும்… செய்வார்களா? ஹேட்ஸ் ஆஃப் கேடிஆர் சார்…

-ஆறுமுகம், நாகப்பட்டினம்

நேபாளத்தில் இளைஞர்கள், மாணவர்கள் சமூக தள தடைக்கு எதிராக போராடியது நல்ல விஷயம்தான். அதேநேரம்,  இளைஞர்களை போராடாமல் நுகர்வு கலாசார உலகில் அடிமைகளாக சிக்க வைத்திருப்பதும் இதே சமூக தளங்கள்தான். இந்த புரட்சி, முழுக்க முழுக்க மாணவர்களால் உருவாக்கப்பட்டதா என்பதே எனக்கு சந்தேகமாக இருக்கிறது.

குமரன், சென்னை

ஆர்.எஸ்.எஸ்சுக்கும் மோடிக்கும் கருத்து வேறுபாடு என்று  சில மீடியாக்கள் கிளப்பிவிட்டதை தமிழில் பல மீடியாக்கள் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தனர். ஆர்.எஸ் எஸ். பதவிக்கு ஆசைப்படாத ஒரு அமைப்பு. நாட்டுக்காக மட்டுமே மோடிக்கு சில கடிவாளங்களை அவர்கள் போடுவார்கள். அதுவும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் பிறந்தநாளுக்கு மோடி எழுதிய கட்டுரை  அந்த வதந்திகளை சுக்குநூறாக உடைத்துவிட்டது என்பதே உண்மை.

-செண்பக மூர்த்தி

கோவை.

நயினார் நாகேந்திரனை மாநில பாஜக தலைவராகக் கொண்டுவந்ததே, அதிமுகவுடன் சுமுக உறவை பேணி காக்க வேண்டும் என்பதுதான். அவர் எப்படி டிடிவி தினகரனோடு நல்லுறவாக இருக்க முடியும்? முக்குலத்தோர் சமுதாயத்தில் தன்னை தவிர இன்னொரு தலைவர் எமெர்ஜ் ஆவதை நயினார் சற்றும் விரும்பமாட்டார். எல்லாம் அமித் ஷாவால் ஏற்கனவே எழுதப்பட்டபடியே நடக்கிறது,

சௌமியா, தூத்துக்குடி

இனிமேல் குனிய முடியாது என்ற திண்டுக்கல் சீனிவாசனின் வார்த்தைகள் ஆயிரத்தில்  சில வார்த்தைகள். அதிமுக நிர்வாகிகளின் எண்ண ஓட்டம் முழுதும் இப்படித்தான். மன்னார்குடி ஆட்சியில் எதையும் செய்ய முடியாத அடிமைகளாக இருப்பதை விட, பாஜகவுக்கு அனுசரனையாய் இருந்து எல்லாவற்றையும் செய்வது கொள்வதையே அதிமுகவினர் இன்றைக்கு விரும்புகிறார்கள்.

-கண்ணன், சித்தாலப்பாக்கம்

சீக்கியர்களுக்கும், , தமிழ்நாட்டின் அய்யாவழி பக்தர்களுக்கு இடையே இருக்கும் ஒற்றுமைகள் ஆச்சரியமாக இருந்தன.  இந்த கலாச்சார வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியாவின் பலம்.

Ara