இந்தியாவில் விதிகளை மீறும் வங்கிகள் மீது ஆர்பிஐ ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியானது நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகள் மற்றும் NBFC களை ஒழுங்குபடுத்தி வருகிறது. விதிகளை மீறியும், வாடிக்கையாளர் நலனுக்கு எதிராகவும் செயல்பட்டால், அந்த வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில், பல வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி கடுமையான நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், 4 வங்கிகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 4 வங்கிகள் நிரந்தரமாகவே மூடப்பட்டுவிட்டன.
மேலும், இம்மாதம் ரிசர்வ் வங்கி 8 வங்கிகளுக்கு அபராதம் விதித்துள்ளது. அனைத்தும் விதிகளை மீறியதாக குற்றம்ச்சாட்டு எழுந்துள்ளது. இந்த பட்டியலில் சிட்டி வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் கோடக் மஹிந்திரா ஆகிய வங்கிகளும் அடங்கும். ஆனால், இந்த நடவடிக்கை வாடிக்கையாளர் – வங்கி இடையேயான பரிவர்த்தனைகளை பாதிக்காது என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் நிரந்தரமாக மூடப்பட்ட வங்கிகள் :
• அஞ்சனா அர்பன் கூட்டுறவு வங்கி, அவுரங்காபாத்
• கலர் மெர்ச்சண்ட்ஸ் கூட்டுறவு வங்கி, அகமதாபாத்
• இம்பீரியல் அர்பன் கூட்டுறவு வங்கி, ஜலந்தர்
• சங்கர்ராவ் மோஹிதே பாட்டீல் சஹாகரி வங்கி, அக்லுஜ்
உரிமம் ரத்து செய்யப்பட்டது ஏன்..?
மேற்கண்ட 4 வங்கிகளுக்கு போதுமான மூலதனமும், வருவாய் ஈட்டும் வாய்ப்புகளும் இல்லாததால் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த வங்கிகள் தொடர்ந்து இயங்கினால், அது வாடிக்கையாளர்களை பாதிக்கக் கூடும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த 4 வங்கிகளின் நிலை மிகவும் மோசமாக இருப்பதால், அவற்றின் தற்போதைய வைப்புத் தொகையாளர்களுக்கு கூட திருப்பிச் செலுத்த முடியாது.
அபராதம் விதிக்கப்பட்ட 8 வங்கிகள் :
- இந்தியன் வங்கி
- இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
- பஞ்சாப் நேஷனல் வங்கி
- கோடக் மஹிந்திரா வங்கி
- சிட்டி பேங்க்
- ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் லிமிடெட்
- ஆர்யவர்ட் வங்கி (லக்னோ)
- ஸ்ரீ கணேஷ் சககாரி வங்கி லிமிடெட் (நாசிக், மகாராஷ்டிரா