திருவனந்தபுரம் கவுடியார் அரச குடும்பத்தை சேர்ந்த பூயம் திருநாள் கவுரி பார்வதி பாய் அவர்கள் ஓண திருநாள் பவுணர்மி பூஜையை முன்னிட்டு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். அவரை குமரி மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் பிரபா ஜி. ராமகிருஷ்ணன் சிறப்பு மரியாதை செய்து வரவேற்றார். அருகில் அறங்காவலர் குழு உறுப்பினர் துளசி தரன் நாயர், கோயில் மேலாளர் ஆனந்த உள்ளிட்டோர் உள்ளனர்.

