• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ரன்பீர் கபூர் நடிக்கும்‘அனிமல்’

அர்ஜுன் ரெட்டி’ படத்தின் மூலம் தனது அறிமுக இயக்கத்திலேயே இந்திய சினிமா உலகை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா. பாக்ஸ்ஆபீஸ்வசூலில் வெற்றி
பெற்றஅப்படத்தின் இந்தி ரீமேக்கான ‘கபீர் சிங்’ மூலம் இந்தி திரையுலகில் அதிர்வுகளை ஏற்படுத்திய இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காஇந்தி நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் ‘அனிமல்’ என்ற படத்தை இயக்குகிறார்
தயாரிப்பாளர்களான பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரிக்கின்றனர்.
ரன்பீர் முதன்முறையாக இப்படத்தில் தீவிரமான ஆக்‌ஷன் கலந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரன்பீர் கபூர் மற்றும் சந்தீப் ரெட்டி வாங்காவின் மாறுபட்ட காம்பினேஷனில் மேலும் பல முன்னணி நட்சத்திரங்களும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரன்பீருக்கு ஜோடியாக, நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க, நடிகர் அனில் கபூர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடிக்கிறார்.
இந்தியா முழுமைக்கும் திரை ரசிகர்களுக்கு ஒரு புது அனுபவத்தை தரும் மாறுபட்ட ஆக்‌ஷன் டிராமாவாக இப்படம் உருவாகிறது என புத்தாண்டு அன்று அறிவித்திருக்கும் படக்குழு
படத்தின்முதல்பார்வையை
வெளியிட்டுள்ளனர். நீண்ட தலைமுடி மற்றும் அடர்த்தியான தாடியுடன், கூர்மையான கோடரியுடன் இருக்கும் ரன்பீரின் தோற்றம் அவரது ரசிகர்களை கவரும் வகையில் உள்ளது.
இந்த முதல் பார்வை போஸ்டர் படம் ரசிகர்களை மிரள வைக்கும் அழுத்தமான படைப்பாக இருக்கும் என்பதை உறுதி செய்கிறது.
இத்திரைப்படம் 2023, ஆகஸ்ட் 11-ம் தேதியன்று இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.