விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் விவசாயத்தை மட்டுமே நம்பி இருந்த நிலையில் தொழில் நிறுவனங்களை உருவாக்கி தொழிலில் நகரமாக மாற்றிய பெருமையுடைய ராம்கோ நிறுவனங்களில் நிறுவனர் அமரர் பி ஏ சி இராமசாமி ராஜா 131 வது பிறந்த தின விழா இராஜபாளையத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
காலையில் சஞ்சீவி மலை அடிவாரத்தில் உள்ள அவரது நினைவாலயத்தில் ராம்கோ குரூப் சேர்மன் பி ஆர் வெங்கட்ராமராஜா தலைமையில் அவரது குடும்பத்தினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

பி.ஏ.சி. ராமசாமி ராஜா நினைவு இசைப்பள்ளி மாணவ மாணவிகளின் கீர்த்தனாஞ்சலியும் இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. பின்னர் இராஜபாளையம் சொக்கர் கோவிலில் இருந்து நிறுவனர் படத்திற்கு பூஜைகள் நடத்தப்பட்டு பின்னர் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பி.ஏ.சி. ராமசாமி ராஜா படத்தை அலங்கரித்து ஸ்தாபகர் ஜோதி ஓட்டம் துவங்கப்பட்டு துலுக்கப்பட்டி மதராஸ் சிமெண்ட்க்கு ஊழியர்கள் தொடர் ஓட்டம் மூலம் கொண்டு சென்றனர்.
ஸ்தாபகர் ஜோதியை ராம்கோ சேர்மன் பி. ஆர். வெங்கட்ராம ராஜா ஏற்றி வைத்து தொடர் ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.




