புதுக்கோட்டை மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் பாஜக சார்பாக மாவட்ட தொண்டர்கள் சார்பாகவும் ஆழ்ந்த வேதனை தெரிவித்தார்
டெல்லி குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு புதுக்கோட்டைமேற்கு மாவட்ட பாஜ சார்பில் ஆழ்ந்த வேதனையை தெரிவிக்கிறது, அவர்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்தனை செய்கிறோம்

இது போன்று தமிழகத்தில் நடைபெறாமல் இருக்க மாண்புமிகு தமிழக முதல்வர், அவர்களும் மாண்புமிகு தமிழக போக்குவரத்து துறை அமைச்சர், அவர்களும் மாவட்ட ஆட்சியர், அவர்களும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அவர்களும் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொட்டப்படுகிறது. தமிழகததை்த உலுக்கிய போலி பதிவு எண் கார்கள் தொடர்பாக 2020ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகாவில் நடந்தது, ஏறத்தாழ 70 கார்களுக்கு மேல் போலி பதிவு எண்கள் கண்டறியப்பட்டு அதன் எண்கள் மற்றும் பதிவு செய்த மோட்டார் வாகன ஆய்வர் மீது புதுக்கோட்டைவட்டார போக்குவரத்து அதிகாரியே எஸ்பியிடம் புகார் கொடுத்தார், அந்த புகார் புகார் மாவட்ட குற்றப்பிரிவில் சி,10183952 பதிவு எண் கீழ் 29/01/2020ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது,
இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு 5ஆண்டுகளாக போலி பதிவு எண் கொண்ட வாகனங்கள் பெயரளவுக்கு கைப்பற்றப்பட்டு தற்போது கா(சா)ட்சி பொருளாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 3 வாகனங்கள் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் வாகனங்கள் பதிவு செய்த நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை. மேலும் போலி பதிவு எண் பெற்ற கார்கள் தமிழகத்தில் எங்கு பயன்பாட்டில் உள்ளன என்பதை நினைக்கும் போது அசாம்பாவிதற்கு பயன்படுத்திட கூடாது என்ற கவலை வேதனை உருவாக்கியுள்ளது.
கடந்த 4ஆண்டுகளாக தமிழக காவல்துறை நிர்வாக பொறுப்பில் வைத்து இருக்கும் தமிழக முதல்வரும் வட்டார போக்குவரத்து துறை கவனித்து வரும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் இவ்விவகாரத்தினை ஆழ்ந்து கவனித்து போலி பதிவு எண் விவகாரத்தில் வழக்கு பதிவான விபரங்களை பார்த்தால் கடும் அதிர்வலைகளை உருவாக்கும், தற்போது கார் எங்கு பயன்பாட்டில் உள்ளது. அதற்கு உடந்தையாக இருந்தவர்களை உடனடியாக தமிழக காவல்துறை உடனடியாக விசாரணையில் இறங்கி கைது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேவேளையில் இந்த போலி பதிவு எண் கார் தொடர்பாக தமிழகத்தை உலுக்கும் மோசடி தொடர்பாக மத்திய அரசு NIA விசாரணைக்கு உத்தரவிட்டு, போலி பதிவு எண் கார்கள் தொடர்பாக உயர் மட்ட விசாரணை நடத்தி உரிய விதிமுறைகளை வகுத்து அறிவிக்க வேண்டும்.











; ?>)
; ?>)
; ?>)