• Mon. May 13th, 2024

ராமர் பாலம் திரை விமர்சனம்

Byஜெ.துரை

Aug 27, 2023

சுபாஷ்கரன் தயாரித்து அபிஷேக் சர்மா இயக்கி மஹாவீர் அக்‌ஷய்குமார் நடித்து வெளி வர உள்ள திரைப்படம் ராமர் பாலம்.

இப்படத்தில் நாசர், நுஷ்ரத் பருச்சா, ஜாக்குலின் ஃபெர்னான்டஸ், சத்யதேவ் கன்சர்னா மற்றும் பலர் நடித்துள்ளனர். ராமர் பாலத்தை உடைத்து கடலில் கப்பல் போக்குவரத்து நடத்த திட்டமிடுகிறது ஒரு தனியார் கப்பல் நிறுவனம்.அதற்கு அரசும் ஒப்புதல் அளிக்கிறது. ராமர் பாலத்தை இடிக்கக்கூடாது என்று பொதுமக்கள் போராட்டம்
ஒரு பக்கம்.இன்னொரு பக்கம் பாலத்தை இடிக்க தடை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று வருகிறது. இதற்கு நீதிமன்றத்தில் ராமர் பாலம் இயற்கையாக உருவான கல் மண் படிமம் என்று கப்பல் கம்பெனி சார்பில் வாதம் வைக்கப்படுகிறது.

ராமர் பாலம் தானாக உருவான ஒரு படிமம் என அறிக்கை தருகிறார், கடவுள் நம்பிக்கை இல்லாத தொல் பொருள் ஆராய்ச்சியாளரான ஆரியன், அதை நீதிமன்றம் ஏற்க மறுக்கின்ற நிலையில் உறுதியான ஆதாரம் தேடி கடலுக்குள் மூழ்கி ராமர் பாலத்துக்கே சென்று ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார் ஆரியன். முடிவில் ராமர் பாலம் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீ ராமர் கட்டியது தான் என்று ஆதாரத்தை நீதிமன்றத்தில் காட்டுகிறார் ஆரியன்.

ஆதாரத்தை நீதிமன்றமும் ஏற்று ராமர் பாலத்தை இடிக்க தடை விதிக்கிறது. அக்‌ஷய்குமார் தொடக்க காட்சிகளில் இருந்து நாத்திகம் பேசுவார் படத்தின் முழுக்க கடலுக்குள் உள்ள ராமர் பாலத்தை பற்றிய ஆராய்ச்சி காட்சிகளாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் செய்யும் ஆராய்ச்சியில் ராமர் பற்றி நிரூபிக்க முடியாத நிலையில் இலங்கைக்கு சென்று ராவணன் வாழ்ந்த வரலாறை நிரூபிக்க முயற்சித்துள்ளார் அக்ஷய்குமார்.

ஹெலிகாப்டர் சண்டை காட்சியில் ஹெலிகாப்டர் தரையில் மோதி விழும் காட்சியில் பைலட் மட்டும் சாவதும் அக்‌ஷய்குமார் மற்ற இருவரும் தப்பி நடந்து வருவது என்பது புத்திசுவாதினம் இல்லாதவர்கள் பார்க்கும் படம் என்று பார்வையாளர்களை நினைக்க வைத்துள்ளது.

படத்தில் ஒளிப்பதிவாளர் அசீம் மிஸ்ராவின் பங்கு படத்திற்கு ஒரு சதவீதம் கூட இல்லை. இசையை பல இசை அமைப்பாளர்கள் சேர்ந்து போட்டா போட்டி சொதப்பியுள்ளனர். மொத்தத்தில் ராமர் பாலம் திரைப்படம் திரையரங்கை விட்டு பாதியில் வெளியே போகமல் இருக்க பார்வையாளர்களுக்கு பொறுமை வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *