• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

ரஜினி ரசிகர்கள் 50 கிலோ எடையில் கழுகு சிலை பிரதிஷ்டை செய்து கோவிலில் சிறப்பு பூஜை

ByJeisriRam

Jun 13, 2024

திருமங்கலத்தில் ரஜினிகாந்த்தை நேரில் சந்திக்க விருப்பப்பட்டு அவரது அழைப்பு வரவேண்டும் என்பதற்காக கோவில் அமைத்து ரஜினிகாந்த்க்காக சிலை வைத்த ரஜினி ரசிகர் தொடர்ந்து ரஜினியிடமிருந்து அழைப்பு வராததால் அவரது கவனத்தை ஈர்க்கும் விதமாக இன்று கழுகு சிலையை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தினார்.

தொடர்ந்து ரஜினியின் அழைப்பு வரும் வரை பலகட்ட முயற்சி மேற்கொள்ளப் போவதாகவும் தெரிவித்தார்.

ரஜினியை தங்களது தெய்வமாக பார்ப்பதாக ரசிகர்கள் கூறுவது உண்டு. ஆனால் உண்மையிலேயே ரஜினியை குலதெய்வமாக கருதி அவருக்காக கோவில் அமைத்து தினந்தோறும் பூஜை செய்துவரும் வித்தியாசமான ரசிகர் ஒருவர் உள்ளார் .

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தனியார் திருமண தகவல் மையம் நடத்தி வரும் முன்னாள் ராணுவ வீரர் கார்த்திக். திருமண தகவல் மையம் நடத்தி வந்தாலும் நடிகர் ரஜினிகாந்தின் தீவிர பக்தராக கார்த்திக் இருந்து வருகிறார். ரஜினிகாந்த் மேல் கொண்ட பக்தியின் காரணமாக திருமங்கலத்தில் உள்ள தனது அலுவலகத்தில் ஒரு அறையை கோவிலாக வடிவமைத்து அந்தஅறைக்குள் அபூர்வ ராகங்கள் முதல் ஜெயிலர் வரை நடிகர் ரஜினிகாந்த் நடித்து வந்த திரைப்படங்களின் புகைப்படங்கள் அனைத்தையும் சுவர் முழுவதும் ஒட்டி வைத்து திரும்பும் திசையெல்லாம் ரஜினிகாந்த் முகம் தெரியும் அளவிற்கு கோவிலை வடிவமைத்துள்ளார். கோவிலை அமைத்ததோடு மட்டுமல்லாமல் தினந்தோறும் காலை, மாலை என இரண்டு வேளைகளும் சிறப்பு பூஜைகள் செய்து ரஜினிகாந்தை வழிபட்டு வந்த நிலையில் ரஜினிகாந்திற்காக மூன்றடி உயர கருங்கல்லில் சிலை வடித்து கோவிலில் வைப்பது போல் திருவாச்சி நாககீரிடம் அமைத்தும் தினந்தோறும் பூஜை செய்து வருகிறார்.

மேலும் முக்கிய நாட்களில் நடிகர் ரஜினிகாந்த் திருவுருவப்படத்திற்கு பால், சந்தனம், தயிர்,விபூதி,பன்னீர், இளநீர் என பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் சூடம் ஏற்றி சிறப்பு ஆராதனை செய்தார்.

இது தொடர்பான செய்திகள் பத்திரிiகைகள்,ஊடகங்களில் வெளிவந்தாலும் இதுவரையிலும் ரஜினியிடமிருந்து இன்னும் அழைப்பு வரவில்லை தலைவரிடமிருந்து அழைப்பு வரவில்லை என்றாலும் மனம் தளராத கார்த்திக் எப்படியாவது ரஜினியின் கண் பார்வை தன் மீது பட வேண்டும் என முடிவு செய்து ரஜினி கோவிலில் ரஜினிகாந்த் நடித்த கழுகு திரைப்படத்தை நினைவு கூறும் வகையில் கழுகு சிலை பிரதிஷ்டை செய்ய முடிவு செய்து ஒன்றை அடி உயரம் 50 கிலோ எடை கொண்ட கருங்கல்லில் கழுகு அமர்ந்திருப்பது போல் சிலை வடித்து அந்த சிலையை இன்று பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

ரஜினி கோவிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டு கழுகு சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து ரஜினி சிலைக்கும் கழுகு சிலைக்கும் பால் சந்தனம் தயிர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் ராணுவ வீரர் கார்த்திக் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு ரஜினி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் ராணுவ வீரர் கார்த்திக் தலைவர் ரஜினிகாந்தை நேரில் சந்திக்க வேண்டும் என்பதற்காக ரஜினிகாந்த்திற்கு கோவில் அமைத்து தினமும் பூஜை செய்து வழிபட்டு வருவதாகவும் தொடர்ந்து ரஜினியின் சாதனைகளை வலியுறுத்தும் விதமாக ரஜினிக்காக பறவைகளில்ராஜாளியாக சொல்லம் கழுகு போல் ரஜினி உயரத்தில் இருக்கிறார்.

அதனை உணர்த்தும் விதமாகவும் ரஜினிகாந்த் நடித்த கழுகு திரைப்படத்தை நினைவு கூறும் வகையில் கழுகு சிலை அமைத்துள்ளதாக தெரிவித்தார்.

ரஜினியிடம் இருந்து என்றாவது ஒரு நாள் தலைவர் ரஜினி அழைப்பார் எனவும் உணர்ச்சி பொங்க கூறினார். ரஜினியின் கண்பார்வை தன்மேல் பட்டு ரஜினியிடமிருந்து அழைப்பை எதிர்பார்த்து ரஜினி கோவிலில் கழுகு சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி நெகழ்ச்சியை ஏற்படுத்திய ரஜினிகாந்த் ரசிகரின் மீது ரஜினியின் கழுகு பார்வை படுமா?