தமிழகத்தில் சுதந்திர இந்தியாவில், மொழிவழி மாநிலங்கள் என்று மத்தியில் பிரதமர் ஜவஹர்லால் நேரு இருந்த காலத்தில் செயல் படுத்திய சட்டத்தால்,
தமிழர்கள் நிறைந்த குமரி மாவட்டம் கேரளத்தின் பகுதியாக இருந்த காலையில்,
குமரி மாவட்டத்தை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என குமரி தமிழர்களின் இரண்டாவது சுய உரிமை போராட்டத்தை வழி நடத்திய போர்படை தளபதி ஐயா மார்சல் நேசமணி யின் தோளோடு, தோள் களத்தில் நின்ற இளைஞர்கள் கூட்டத்தில் திலகம் போன்று திகழ்ந்த பொன்னப்பநாடர் வழி, வழியாக காங்கிரஸ் பேர் இயக்கத்தில்,

பொன்னப்பநாடார் சட்டமன்ற உறுப்பினர்,தமிழக எதிர் கட்சி தலைவர் என்ற பதவிகளுக்கு பெருமை சேர்த்தவர்.
பொன்னப்பா நாடார் இவரது மகன் விஜயராகவன் சட்டமன்ற உறுப்பினர் என்ற பதவியில் பயணித்தது போல்,பொன்னப்ப நாடார் மகள் வழி பேரனான ராஜேஷ் குமார் கடந்த இரண்டு சட்டமன்ற தேர்தல்களில். கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர். இரண்டாவது முறை சட்டமன்ற உறுப்பினர் என்ற நிலையில். அகில இந்திய காங்கிரஸ் தலைமை ராஜேஷ் குமார்யை சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் என அழகு பார்த்து வரும் நிலையில்.
குமரியின் மைந்தன் இன்று தமிழக மாவட்டங்களில் உள்ள அனைத்து காங்கிரஸ் கட்சியினரும் போற்றும் வகையில் இயக்கப்பணியாற்றி வருபவர்.
ராஜேஷ் குமார் அண்மையில் தலைநகர் டெல்லியில்.நாடாளுமன்ற எதிர்க்கட்ச்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் அன்னை சோனியா
காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
தமிழ் நாடு அரசியல் நிலவரம் காங்கிரஸ் கட்சியின் மக்கள் பணியுடன், கட்சி பணிகள். காங்கிரஸ் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகளின் வலிமை. தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணி புதிய கட்டுரைகளை அவர்களது அணிக்கு அழைப்பு விட்டுக்கொண்டிருக்கும் நிலையில், அந்த கூட்டணியில் இருந்த முன்னாள் மூன்று முறை முதல்வர் அந்த கூட்டணியில் இருந்து விலகி, எவரும் எதிர் பார்த்திராத சூழலாக
முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லம் தேடி வந்து ஓ.பன்னீர்செல்வம் நடத்திய சந்திப்பு.
டெல்லி பாஜக தலைமையை அதிர்ச்சி அடைய செய்ததால், மீண்டும் ஓபிஎஸ்க்கு அழைப்பு விடும் சூழலில் தமிழக அரசியலின் நிகழ்வுகள் குறித்து பேசியுள்ளார்கள்.








