• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தஞ்சையில் ராஜராஜசோழனின் 1037-வது சதயவிழா கொண்டாட்டம்

ByA.Tamilselvan

Nov 3, 2022

ராஜராஜசோழனின் சதயவிழா தஞ்சையில் இன்று அரசுவிழாவாக கொண்டாடப்படுகிறது.சோழ சாம்ராஜ்யத்தின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவர் ராஜராஜ சோழன். இவர் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று பிறந்தார். இவரது பிறந்தநாள் சதய விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 1037-வது சதய விழா இரண்டு நாள் அரசு விழாவாக நடைபெற்று வருகிறது. இனி ஆண்டுதோறும் அரசு விழாவாக நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். நேற்று முதல் நாள் விழா நடைபெற்றது. ராஜராஜ சோழன் பிறந்த சதய நட்சத்திரமான இன்று 2-ம் நாள் விழா தஞ்சை பெரிய கோவிலில் தொடங்கியது. இதற்காக இன்று தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.