கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் இன்று (ஜீன்26)ம் நாள் நாள் முழுவதும் விடாது பெய்த மழையால் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. மழை காரணமாக சாலை எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

குமரி பகவதி அம்மன் கோயில் தாழ்வான பகுதியில் இருப்பதால், மேடான பகுதியில் பெய்த கனமழை தண்ணீர் பகவதி அம்மன் கோயில் உள்ளே புகுந்தது குளம் போல் காட்சி அளிக்கிறது.
நகராட்சி தலைவர் குமரி ஸ்டிபன் மற்றும் பணியாளர்கள் பகவதியம்மன் கோவில் பகுதியை நேரில் ஆய்வு செய்தனர்.









