குமரி மேற்கு மாவட்டம் கழுவன்திட்டை குழித்துறை மேற்கு ரயில் நிலையம் செல்லும் பாதை மிகவும் மோசமான நிலையில் இருப்பதையும், நகராட்சியில் இருந்து கழிவுநீர் ரயில் நிலையம் முன்பு தேங்குவதால் துர்நாற்றம் வீசுகிறது மற்றும் பாத்ரூம் வசதி இல்லாத நிலையில் உள்ளதை பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து இன்று கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் ஆய்வு மேற்கொண்டார்.

கழிவுநீர் தேங்காமல் இருப்பதற்கு உடனடியாக குழித்துறை கமிஷனர் ராஜேஷ்வரனை.நிகழ்விடத்தில் இருந்தே தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள கேட்டுக் கொண்டார். மேலும் ரயில்வே அதிகாரிகளை தொடர்பு கொண்டு ரயில்வே நிலைய அணுகு சாலை மற்றும் கழிவறைகளை செப்பனிடவும், ரயில் நிலைய கட்டிடம் மிகவும் பழுதடைந்து உள்ளதால் புதிய கட்டிடம் கட்டி, மின்சார வசதி மற்றும் பயணிகளுக்கும் பாதுகாப்பு வசதிகளுடன் நவினமயமாக்கவேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இந்த ஆய்வின் போது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரத்தினகுமார், பாகோடு மோகன்தாஸ், தேவிகோடு பஞ்சாயத்து தலைவர் ரதீஷ்குமார், மூத்த காங்கிரஸ் நிர்வாகி அட்வகேட் தங்கமணி, உட்பட பலர் கலந்துகொண்டனர்.