சிவகாசி மாநகரம் மற்றும் சுற்று வட்டார பொது மக்களின் 30 ஆண்டு கோரிக்கை நிறைவேறு வகையில் சிவகாசியில் – சாட்சியாபுரம், ரயில்வே கேட் மேம்பாலப் பணி விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.

சுமார் 70 கோடி மதிப்பீட்டில் நடைப்பெறும் இந்த பணியானது கிட்டத்தட்ட 80 சதவீதம் நடைபெற்று வருகிறது. ரயில்வே மேம்பாலம் வேகமாக திறக்க வேண்டும் என்று எண்ணத்துடன் தினமும் கண்காணித்து வருவதுடன் விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் சிவகாசி காங்கிரஸ் சட்ட உறுப்பினர் அசோகன் இன்று மாலை மேம்பால பணி நடைப்பெறும் இடத்திற்கு சிவகாசி உதவி ஆட்சியர் முகமது இர்பான் இ.ஆ.ப மற்றும் வட்டாசியர் லட்சம் மற்றும் அரசு அதிகாரிகளுடன் பாலத்தின் மீதமிருக்கும் பணிகள் என்னென்ன என்பதை நேரில் ஆய்வு செய்தனர்.

மேலும் இந்தாண்டு 2025 இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு கொண்டு வர வேண்டும் என மேம்பால பணியை மேற்கொள்ளும் ஒப்பந்தார்களிடம் வலியுறுத்தினர். இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையாளர் சரவணன் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.













; ?>)
; ?>)
; ?>)