• Sat. Nov 15th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ராதேஷ்யாம் ஜனவரி 14 அன்று வருமாவாராதா குழப்பிய இயக்குனர்

பிரபாஸ் – பூஜா ஹக்டே காதலர்களாக நடித்துள்ள படம் ராதே ஷ்யாம். இப்படத்தை வருகிற ஜனவரி 14ஆம் தேதி வெளியிடுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்கள். எதிர்பாராதவிதமாககொரோனா தொற்று அதிகரித்ததால் பல்வேறு மாநிலங்களில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி என மாநில அரசுகள் அறிவித்து வருகின்றனர் தமிழகத்தில் ஜனவரி முதல் தேதியில் இருந்து 50% இருக்கை அனுமதியை அமுல்படுத்தி வருகின்றனர் திரையரங்கு உரிமையாளர்கள் இதனால் ஜனவரி 7 அன்று வெளியாக இருந்த RRR வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது அதேபோன்று ராதே ஷ்யாம் படத்தையும் மாற்று தேதியில் வெளியிட போவதாக செய்திகள் வெளியாகி வந்தன. இப்படத்தின் தயாரிப்பாளர் வெளியிட்ட ஒரு அறிக்கையில், ராதே ஷ்யாம் படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றப் போவதாக தெரிவிக்கவில்லை. அதனால் திட்டமிட்டபடி அப்படம் திரையரங்கில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராதே ஷ்யாம் பட இயக்குனர் ராதா கிருஷ்ணகுமார் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், படம் தள்ளிப் போகும் என்ற முடிவுக்கு ரசிகர்களை உருவாக்கியது நேரங்கள் கடினமானவை இதயங்கள் பலவீனமானவை மனங்கள் குழப்பத்தில் உள்ளன. வாழ்க்கை நம்மை நோக்கி எரிந்தாலும் நமது நம்பிக்கைகள் எப்போதும் உயர்ந்தவை. பாதுகாப்பாக இருங்கள். உயர்வாக இருங்கள் என்று கூறியிருக்கிறார். அவரது இந்த பதிவை பார்க்கையில் ராதே ஷ்யாம் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு குறித்து மறைமுகமாக சுட்டிக் காட்டுகிறீர்களா? என்று ஒரு ரசிகர் கேட்டதற்கு, அப்படியான திட்டங்களை வைத்திருந்தால் அதை நேரடியாக தெரிவித்து இருப்பேன் என்றும் பதிலளித்துள்ளார்.ஆனபோதிலும் பிரபாஸின் ரசிகர்கள் ராதா கிருஷ்ணகுமார் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தை நம்பவில்லை. காரணம் அவர்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் பல சந்தர்ப்பங்களில் தங்கள் அறிக்கைகளில் மாற்றிவிட்டார்கள். அதனால் ஜனவரி 14ஆம் தேதி ராதே ஷ்யாம் படம் வெளி வர வாய்ப்பில்லை என்பதே பிரபாஸ் ரசிகர்களின் கருத்தாக உள்ளது.