• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கனல் பட இசை வெளியீட்டு விழாவில் ராதாரவியின் சர்ச்சை பேச்சு..!

Byவிஷா

Jul 1, 2022

சென்னையில் நடைபெற்ற கனல் பட இசை வெளியீட்டு விழாவில், நடிகர் ராதாரவி, நடிகை தமன்னா பற்றி மோசமாகப் பேசியிருப்பது அனைவரையும் முகம்சுளிக்க வைத்திருக்கிறது.
சமய முரளி இயக்கியிருக்கும் கனல் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் சீனியர் நடிகரான ராதாரவி கலந்து கொண்டு பேசினார்.
அது யாரு சமந்தாவா, இல்லை சமந்தா இல்லை. தமன்னா. உடம்புல கொஞ்சம் கூட கருப்பே இல்ல. நானும் சுத்தி சுத்தி பார்த்துட்டேன். கொஞ்சம் கூட கருப்பே இல்ல. கனல் பட ஹீரோயினும் அதே போன்று செகப்பா, அழகா இருக்கார். கிளாமராக நடிப்பார்னு நினைச்சேன். ஆனால் படத்தை பார்த்தபோது தான் நடிப்பிலும் அசத்தியிருக்கிறார் என்பது தெரிந்தது என்றார்.
தமன்னாவை பற்றி ராதாரவி பேசியதை பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் அவரை விளாசிக் கொண்டிருக்கிறார்கள். எதையாவது பேசுகிறேன் என்று எப்பொழுது பார்த்தாலும் நடிகைகளை பற்றி இப்படி மோசமாக பேசும் ராதாரவியை ஏன் பட விழாக்களுக்கு அழைக்கிறார்கள். சர்ச்சையை வைத்தே விளம்பரம் தேட இதெல்லாம் ஒரு வழியா எனவும், இந்த ராதாரவியை கண்டிப்பாரே இல்லையா எனவும் தெரிவித்துள்ளனர்.