தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 45,000 தெரு நாய்கள் மற்றும் 5,000 வீட்டு வளர்ப்பு நாய்கள் உள்ளன. இந்நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாம், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து, 50 நாட்கள் நடத்தப் படுகிறது.

அந்த வகையில் முக்கிய தெருக்களில் சென்று மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட கால்நடை மருத்துவர் கொண்ட குழுக்கள் நேரடியாக சென்று நாய்களை பிடித்து தடுப்பூசி செலுத்துகின்றனர்.
அந்தவகையில் தாம்பரம் மாநகராட்சி 4 மண்டலத்திற்குட்பட்ட 50வது வார்டு பகுதியில் தெருநாய்களுக்கு தடுப்பூசி போடும் வாகனத்தை மாமன்ற உறுப்பினர் எம்.யாக்கூப் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

அதன்படி முக்கிய தெருக்களுக்கு சென்று நாய்கள் பிடிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தி அங்கே விடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மாநகர் நல அலுவலர் பொற்செல்வன், சுகாதார அலுவலர் சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.