மதுரை மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பாக முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாள் விழா வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் தலைமை தாங்கி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்.

முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மகேந்திரன், தமிழரசன், மாணிக்கம், கருப்பையா, மாநில பேரவைஇணை ராஜேஷ் கண்ணா, ஒன்றிய செயலாளர்கள் காளிதாஸ், ரவிச்சந்திரன்,கொரியர் கணேசன், அரியூர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரூர் செயலாளர் அசோக் குமார் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில்
மகளிர் அணி மாவட்ட செயலாளர் லட்சுமி, வழக்கறிஞர் ராஜ்குமார், பேரூர் செயலாளர் சந்தன துரை, பாசறை மாவட்ட துணைச் செயலாளர் மணிமாறன், பொறியாளர் குரு பார்த்திபன், கோட்டைமேடு பாலன் எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் முடுவார்பட்டி ஜெயச்சந்திர மணியன் மாவட்ட விவசாய அணி இணைச் செயலாளர் வாவிடமருதூர் ஆர்.பி. குமார் அலங்காநல்லூர் ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி முன்னாள் செயலாளர் புதுப்பட்டி கிளைச் செயலாளர் பி பாண்டுரங்கன் தென்கரை நாகமணி மன்னாடிமங்கலம் தெற்கு கிளைக் கழக செயலாளர் ராஜபாண்டி வடக்கு மகேந்திரன் கல்லாங்காடு கிளைக் கழக செயலாளர் ராமு இளைஞரணி மாவட்ட இணைச் செயலாளர் கேபிள் மணி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வேல்முருகன் நன்றி கூறினார்.