• Sat. Oct 18th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

900 கிலோ பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல்..,

தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர்  விஜய் அனிதாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர்  தலைமை காவலர்கள் இருதய ராஜ்குமார் இசக்கிமுத்து  காவலர்கள் பழனி பாலமுருகன் பேச்சி ராஜா ஆகியோர்  இன்று அதிகாலை 03.45 மணிக்கு தூத்துக்குடி தாளமுத்து நகர் விவேகானந்தர் காலனி கடற்கரையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது இலங்கைக்கு கடத்துவதற்காக லோடு வேனில் கொண்டு வரப்பட்ட சுமார் 30 கிலோ எடை கொண்ட 27 மூட்டை பீடி இலைகளும் சுமார் 30 கிலோ எடை கொண்ட 3 மூட்டை கட்டிங் பீடி இலைகளும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.30 லட்சமாகும். இது தொடர்பாக வாகனத்தை ஓட்டி வந்த தாளமுத்து நகர்  கருப்பசாமி நகர் டேவிஸ்புரம் கருப்பசாமி உமா விஜயகுமார் (23) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதுபோலா சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.