• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

புஷ்பா பட நாயகனின் புதிய ஸ்டுடியோ…!!

Byகாயத்ரி

Sep 24, 2022

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் பட்டி தொட்டி எங்கும் பேசப்பட்டது. அதிலும் சமந்தா ஆடிய ஊ… சொல்றியா பாடல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக பாலிவுட்டில் இந்த படத்தின் வெற்றி பெரிய அளவில் பேசப்பட்டது. இதனால் இப்போது இந்தியா முழுவதும் அறியப்படும் நடிகராகி உள்ளார் அல்லு அர்ஜுன். இவர்கள் குடும்பமே திரைப்பட தொழிலின் பல்வேறு பிரிவுகளில் செயல்பட்டு வருகின்றனர். தெலுங்கு சினிமாவின் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் மற்றும் ஆஹா ஓடிடி ஆகியவை அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த் உடையதுதான். இந்நிலையில் இப்போது அல்லு அர்ஜுன் ஆந்திராவில் 10 ஏக்கர் பரப்பளவில் ‘அல்லு ஸ்டுடியோஸ்’ எனும் படப்பிடிப்புத் தளத்தை நிறுவியுள்ளார். அக்டோபர் 1 ஆம் தேதி அவரின் தாத்தாவின் பிறந்தநாள் அன்று இந்த ஸ்டுடியோ திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.