• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ மந்தையம்மன் திருக்கோவில் புரட்டாசி பொங்கல் விழா..,

ByKalamegam Viswanathan

Oct 5, 2023

மதுரை மாவட்டம் அவனியாபுரம் அருகே வெள்ளக்கல் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மந்தையம்மன் திருக்கோவில் புரட்டாசி பொங்கல் விழா கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது.

இவ்விழாவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் காப்புகட்டி அக்னிசட்டி, பால்குடம் எடுத்தும் அலகு குத்தியும் நேர்த்திக் கடன் செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து விழாவின் நிறைவுநாள் நிகழ்ச்சியாக வீடுகளில் வளர்க்கப்பட்ட முளைப்பாரி கரைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் பெண்கள் ஏராளமானோர் நாதஸ்வர மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக சென்று அயன்பாப்பாகுடி கண்மாயில் முளைப்பாரியை கரைத்தனர்.

விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் கிராம பெரியோர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.