தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே, வங்கி, அஞ்சல் துறை, தொலை தொடர்பு துறைகளில், ஒன்றிய அரசின் ஒரு லட்சம் பணியிடங்களை பறித்து தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு துரோகம் செய்தது நியாயமா? தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஒன்றிய அரசின் காலிப்பணியிடங்களை தமிழ்நாட்டு இளைஞர்களை நிரப்பிட வலியுறுத்தியும். தனியார் துறையில் இட ஒதுக்கீட்டை அமுல்படுத்த சட்டம் இயற்ற வலியுறுத்தியும். வாரம் மும்முறை இயங்கும் சென்னை- செங்கோட்டை சிறப்பு ரயிலை வாரத்தில் அனைத்து நாட்களுக்கும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டியும்.

புதுக்கோட்டையில் சுமார் 50,000 ஆயிரம் ஏக்கர் பூ, பழம் என்னும் எந்த பயனும் தராத தைலா மரங்களை அதிகம் பயறுகிறது அரசு !வேலை வாய்ப்புகளை உருவாக்க பல்லுயிர் சூழலை பாதுகாக்கவும் பழ மரக்காடுகளை உருவாக்க வேண்டும்! இளைஞர் வீரோத புதிய தொழிலாளர் சட்டங்களை திரும்ப பெறு! ஒப்பந்தம் மற்றும் முறையை ரத்து செய்! என வலியுறுத்தி *அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் புதுக்கோட்டை ரயில் நிலையம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. முற்றுகை போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் T.மாரிமுத்து, தலைமையில் நடைபெற்றது. இந்த முற்றுகை போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் மு.விஜய் முன்னிலை வகித்தார், முற்றுகை போராட்டத்தை முன்னாள் மாவட்ட செயலாளர் K.ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.

மாவட்ட நிர்வாக குழு தோழர் இரா.ராதாகிருஷ்ணன், இளைஞர் பெருமன்ற பொறுப்பாளர் மா.திலகர், சிபிஐ நிர்வாக குழு உறுப்பினர் மீரமைதீன், CPI திருமயம் ஒன்றிய செயலாளர் சிண்ணாடி, சிபிஐ தோழர்கள் சுந்தரராஜன், பாண்டியராஜன், சேதுராமன், மற்றும் மாவட்டத் துணைச் செயலாளர்கள்: கா.பாலசுப்ரமணியன் A.ஜான்போஸ், S.சிவக்குமார், மாவட்ட குழு ரமேஷ் கண்ணன், மணிகண்டன், விவேகானந்தன், கருப்பையா, சரவணன், மாரிமுத்து, நாகராஜ், சிதம்பரம், சங்கர், ஆனந்த், சக்தி, பாலமுருகன், அபிஷேக், ரகுநாதன், மாரிமுத்து, விவேகானந்தன், வீரமுத்துராஜா, கௌதம், மணிகண்டன், பார்த்தசாரதி, அலெக்ஸ், கலையரசன்,கலந்து கொண்டனர்.




