தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதுக்கோட்டை மனோகரன் சாலையில் உள்ள மாவட்ட சங்க கட்டிடத்தில் நடைபெற்ற பொது குழு கூட்டத்தில் உறுதி ஓட்டுநர்கள் சங்கத்தின் மாநில தலைவர் பச்சையப்பன் மாநில பொதுச் செயலாளர் குமார் மாநில பொருளாளர் முருகன் மாவட்ட தலைவர் ஆறுமுகம் மாவட்ட செயலாளர் காமராஜ் மாவட்ட பொருளாளர் அடக்கணம் உள்ளிட்ட சங்கத்தை சேர்ந்த பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 3.5.2009 அரசு கடிதத்தை ரத்து செய்து தேர்வு நிலை சிறப்பு நிலைக்கு ஓட்டுனர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் ஊதிய முரண்பாட்டை கடைய வேண்டும். பழைய உயர்வு இல்லாத பணியிடமாக ஓட்டுநர் பதவிக்கு கல்வி தகுதியின் அடிப்படையில் தலைமைச் செயலக ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது போல் அனைத்து துறை ஊழியர்களுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த உறுதி ஓட்டுநர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் குமார் தங்களுடைய கோரிக்கையை தமிழக அரசு கனிவோடு பரிசீலனை செய்து சிறப்பு சட்டத்தை நிறைவேற்றி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் இச்சங்கத்தை சேர்ந்த ஏராளமான பொறுப்பாளர்கள் இன்று நடைபெற்ற மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.