• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வுக்கான காலஅட்டவணை வெளியீடு..!

Byவிஷா

May 4, 2023

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வுக்கான காலஅட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு கால திருத்தப்பட்ட கால அட்டவணையை பள்ளி கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2022-23ஆம் ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு எமிஸ் தலம் மூலமாக நடத்த திட்டமிட்டு அதற்கான அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது. அதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் தற்போது கலந்தாய்வுக்கான திருத்தப்பட்ட கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி கலந்தாய்வுக்கான காலி பணியிடங்களில் விவரங்கள் வருகின்ற மே ஐந்தாம் தேதியும், அனைத்து வகை ஆசிரியர்களின் இறுதி முன்னுரிமை பட்டியல் மே 7ஆம் தேதியும் வெளியிடப்படும். பொது மாறுதல் கலந்தாய்வு மே 8ஆம் தேதி தொடங்கி மே 13ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முதல் நாளில் மலை சுழற்சி மாறுதல் கலந்தாய்வு அதனை தொடர்ந்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.