• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மதுரையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு…

Byகுமார்

Nov 1, 2021

மதுரை மாவட்டத்தின் வரைவு வாக்காளர் பட்டியலை மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் வெளியீட்டார். இந்த நிகழ்வில் தேர்தல் அலுவலர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்பு.

மதுரை மாவட்டத்தில் 26,81,727 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை : 13,17,631

பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை : 13,63,897

மூன்றாம் பாலினத்தர் எண்ணிக்கை : 199

நவம்பர் 30 வரை வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யலாம். நவம்பர் 13, 14, 27, 28 ஆகிய நாட்களில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும். இறுதி வாக்காளர் பட்டியல் 2022 ஜனவரி 5ஆம் தேதி அன்று வெளியிடப்படும்.

2021 மார்ச் மாத நிலவரப்படி 26,97,682 வாக்காளர்கள் இருந்தனர். இறப்பு, இடமாற்றம், ஒரு முறைக்கு மேலான பதிவு என 25,415 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். கடந்த வரைவு வாக்காளர் பட்டியலை விட இன்று வெளியிடப்பட்ட வாக்காளர்கள் பட்டியலில் 15,955 வாக்காளர்கள் குறைவாக உள்ளனர்.