மதுரை, சோழவந்தான் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் நிழற் குடைகள் இல்லாததால், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் சுட்டெரிக்கும் வெயிலில் பேருந்துக்காக காத்திருக்கும் நிலை ஏற்படுவதாகவும், இதனால், பேருந்து நிறுத்தங்களில் நிழற் குடைகள் அமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சோழவந்தான் வட்ட பிள்ளையார் கோவில், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜெனகை மாரியம்மன் கோவில், வேப்பமர ஸ்டாப், மின்வாரியம் ஸ்டாப் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்கள் உள்ள நிலையில், எந்த ஒரு பேருந்து நிறுத்தத்திலும் நிழற் குடைகள் இல்லாததால், பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்கள் வெயிலில் நிற்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஏற்கனவே, சோழவந்தான் பகுதி பேருந்து நிறுத்தங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகம் இருந்ததால் நிழற் குடைகள் அமைக்க முடியாத சூழ்நிலை இருந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால், பேருந்து நிறுத்
தங்களில் நிழற் குடைகள் அமைக்க போதுமான இடம் இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். ஆகையால், பொதுமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு சோழவந்தான் பேருந்து நிறுத்தங்களில் நிழற் குடைகள் அமைத்து தர வேண்டும் என, கேட்டுக் கொண்டுள்ளனர். குறிப்பாக, அரசு பெண்கள் பள்ளி மாணவிகள் கூறுகையில்: தினசரி மாலை 4 மணி முதல் 6 மணி வரை பேருந்து நிறுத்தத்தில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் வெயிலில் பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு தனியார் அமைப்புகள் அல்லது சமூக ஆர்வலர்கள் தற்காலிக நிழற்குடைகளை யாவது அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் சிரமத்தை போக்க வேண்டும் எனவும்
கேட்டுக் கொண்டுள்ளனர்.









