தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சியில் 12 அதிமுக கவுன்சிலர் உறுப்பினராகவும் பேரூராட்சி பெரும் தலைவராக அதிமுக மத்திய மாவட்ட கழக செயலாளர் பா,சேகர் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் இரண்டு ஆண்டு காலமாக உரிய முறையில் திட்டப்பணிகள் நடைபெற வில்லை எனவும் கூறப்படுகிறது ஒரத்தநாடு பேரூராட்சி அலுவலகத்திற்கு நிரந்தர செயல் அலுவலர் இல்லை என்றும் பேரூராட்சியில் 5 கோடி ரூபாய் நிதி இருப்பதாகவும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பழிவாங்கும் நடவடிக்கையாக இருந்து
வருவதாகவும் இது குறித்து பலமுறை அதிகாரியிடம் முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இதனால் திமுக அரசையும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய இருந்த நிலையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதனால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது மேலும் ஒரத்தநாடு வட்டாட்சியர் யுவராஜ் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர். மேலும் இதே நிலை தொடர்ந்தால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முறையில் போராட்டத்தை முன்னெடுப்போம் என்றும் பேரூராட்சி பெருந்தலைவர் தெரிவித்தார்.




