தமிழ்நாடு சிஐடியு மின்ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் நாகப்பட்டினம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

திட்டத்தலைவர் கலைச்செல்வன் தலைமை வகித்தார். மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினக்கூலி வழங்க வேண்டும். தடைசெய்யப்பட்ட 19 இடங்களில் பணிபுரியும் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.