திமுக அரசு தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது .

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக 2021 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி 70 வயதை கடந்த ஓய்வூதியர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தியும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் முழு செலவையும் தமிழக அரசு ஏற்க வலியுறுத்தியும், கம்யூடேஷன் தொகை பிடித்தம் செய்வதை பத்து ஆண்டுகளாக குறைக்க வலியுறுத்தியும் நீதிமன்ற தீர்ப்பின்படி 80 வயதை கடந்த ஓய்வூதியர்களுக்கு 20% கூடுதல் தொகை வழங்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற விழாவில் ஏராளமான ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.