கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரத்தில் மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

100 நாள் வேலை திட்டத்தில் அண்ணல் காந்தியடிகள் பெயரை நீக்கிய மத்திய அரசையும், துணை போகும் அதிமுகவையும் கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கொட்டாரம் சந்திப்பில் நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்துக்கு அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பா.பாபு தலைமை வகித்தார். அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் எம்.மதியழகன் முன்னிலை வகித்தார். கொட்டாரம் பேரூர் செயலாளர் எஸ்.வைகுண்ட பெருமாள் வரவேற்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விஜய் வசந்த் எம்.பி, குமரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் கோபி பேரறிவாளன், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய மதிமுக செயலாளர் பாலசுப்பிரமணியம், மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் என்.தாமரைபாரதி, மாநில திமுக தொண்டரணி முன்னாள் துணை அமைப்பாளர் பால ஜனாதிபதி, ஆதி தமிழர் கட்சி தென் மண்டல பொறுப்பாளர் பாஸ்கரன், கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், திமுக நிர்வாகிகள் டி.அரிகிருஷ்ணபெருமாள், ஹெச்.நிசார், காமராஜ், வினோத், இ.எம்.ராஜா, இளங்கோ, ஆல்வின் பிரபு, சின்னமுட்டம் ஷ்யாம், பாலசுப்பிரமணியம், கங்காதரன், சுதை சுந்தர், சுதாகர், பிரேம் ஆனந்த், காங்கிரஸ் நிர்வாகிகள் அரிகிருஷ்ணபெருமாள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நவ




