திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தேனி பங்களா மேடு பகுதியில் தேனி வடக்கு மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேடு மற்றும் போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும் ஜாதி வாரி கணக்கெடுப்பு ஆய்வு நடத்த கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை முடக்கும் வகையில் நெறிமுறைகளை வெளியிடும் அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் தேனி வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமையில் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்*



