மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தோப்பூர் புதுப்பட்டியை சேர்ந்தவர் குமார் இவர் பார்வையற்றோர் நல சங்க தலைவராகவும் உள்ளார் இதே பகுதியைச் சேர்ந்த பார்வையற்றவர்களுக்கான 75 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி கலந்த நான்காண்டுகளுக்கு முன்பு விண்ணப்பித்து பரிசீலனைக்கு பின் தற்போது 53 பேர் வழங்குவதாக தாசில்தார் கவிதா கூறியுள்ளார்.

மொத்தமுள்ள 75 பேருக்கு வழங்க கோரி இன்று திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் பார்வையற்ற சங்கத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர். அதனை தொடர்ந்து தாசில்தார் கவிதா பார்வையற்றோர் சங்கத்தை சேர்ந்தவர் களுடன் பேச்சு வார்த்தை நடத்தி அனைவருக்கும் பட்டா வழங்குவதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டனர்.
இதனால் திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக பார்வையற்றோர் முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது .








