• Mon. Dec 15th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

25 ஆட்டிற்கு இழப்பீடு கேட்டு முற்றுகை போராட்டம்..,

ByVasanth Siddharthan

Apr 22, 2025

திண்டுக்கல் மாவட்டம் பழனி சேர்ந்த மாரியப்பன், ராமு ஆகிய இருவரும் ஆயக்குடி குரும்பபட்டியை சேர்ந்தவர்கள் . இவர் 200 ஆடுகளுக்கு மேல் வளர்த்து வருகிறார். இதற்காக அவ்வப்போது பல்வேறு பகுதிகளில் கிடை அமைப்பார். அவர் தற்போது போதுபட்டியிலிருந்து தாளையம் பகுதியில் கிடை போட்டு வளர்த்து வருகிறார்.

சில தினங்களுக்கு முன்பு ஆடுகளை மேய்த்துக் கொண்டு தாளையம் வழியாக வந்து கொண்டிருந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது இதில் ஆடுகள் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயமுற்று சம்பவ இடத்திலே 20க்கு மேற்பட்ட ஆடுகள் பரிதாபமாக இறந்தன. ஐந்துக்கும் மேற்பட்ட ஆடுகள் படுகாயம் அடைந்தனர்.

ஆட்டின் உரிமையாளர் சாமிநாத காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து இழப்பீடு கேட்டு மனு அளிக்கப்பட்டது. ஆனால் காவல்துறையினர் 35 நாட்கள் ஆகியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் காவல்துறையினரை கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் மற்றும் மாவட்டச் செயலாளர் மாரியப்பன் ஆகியோ தலைமையில் சார் ஆட்சியில் அலுவலகம் முன்பு விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

விரைந்து வந்த வட்டாட்சியர் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். மிக விரைவில் இறந்த ஆட்டிற்கு இழப்பீடு வழங்கப்படும். மற்றும் விபத்து ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடிக்கப்படும் என உறுதி கூறிய காரணத்தால். அனைவரும் கலைந்து சென்றனர்