வத்தலகுண்டு அருகே தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டது ஏராளமான விவசாயிகளும் பொதுமக்களும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் லட்சுமிபுரம் எந்த இடத்தில் தேசிய நெடுஞ்சாலை சார்பில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் இருந்து குமுளி வரை நான்கு வழிச்சாலைக்காக திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது திண்டுக்கல்லில் இருந்து வத்தலகுண்டு வரை இருவழி சாலை மட்டுமே அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.

இந்நிலையில் இந்த இரு வழி சாலையில் வத்தலக்குண்டு அருகே லட்சுமிபுரம் என்ற இடத்தில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. நான்கு வழி சாலை பணிகள் முழுமையாக நிறைவு பெறாமல் சுங்கச்சாவடியை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு பல ஆண்டுகளாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை சுங்கச்சாவடியை திறப்பதற்கு சுங்கசாவடி நிர்வாகம் ஏற்பாடுகளை செய்தது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். இன்று காலை 8 மணிக்கு சுங்கசாவடி செயல்பாட்டுக்கு வரும் என்ற நிலையில் திடீரென சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டது. சுங்கச்சாவடியில் இருந்த அனைத்து உபகரணங்களும் உடைத்து சேதப்படுத்தப்பட்டன.
இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் நிலவியது. இந்நிலையில் சுங்கச்சாவடிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் விவசாயிகள் பெண்கள் மற்றும் ஏராளமானோர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அப்பகுதியில் திமுகவினரும் குவிந்து வருவதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுஇதனால் வத்தலகுண்டு திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு நிலவி வருகிறதுஇந்நிலையில் நிகழ்வு இடத்திற்கு காவல்துறை மற்றும் அதிகாரிகள் இன்னும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது