விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம் இ.ராமநாதபுரம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத நிலை தொடர்ந்து நீடித்து வருவதாகக் கூறி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம் கிராமத்தில் குடிநீர் வசதி தெருவிளக்கு வசதி, கழிவுநீர் செல்ல வாறுகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் தெருக்களில் மண் ரோடாக இருப்பதால், மழைக்காலங்களில் சக்தி காடாக மாறிவிடுகிறது . இதனால் பொதுமக்கள், நடமாட முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.

ஆகையால் உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ஞானகுரு தலைமை வகித்தார்.மண்டல துணைச் செயலாளர் சதுரகிரி, பெனடிக், வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் சிற்றாளன், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்த பின்பு கோரிக்கை மனுவை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) மகேஸ்வரியிடம் கொடுத்தனர்.





